super stars movie going to hit 130 screens in Karnataka

ரஜினிகாந்த் நடித்திருக்கும் காலா திரைப்படத்திற்கு, கன்னடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் இந்த தருணத்தில், நாளை 130 திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது காலா திரைப்படம். இந்த கர்நாடக பிரச்சனை தொடங்கிய போதே, ரஜினி கூலாக அதை எல்லாம் ”தென்னிந்திய திரையரங்கங்களுக்கான சங்கம் பார்த்துக்கொள்ளும்” என தெரிவித்திருந்தார்.

அது தான் இப்பொது நடந்திருக்கிறது. ரஜினி சொன்ன மாதிரியே காலா எந்த தடையும் இல்லாமல் இப்போது கர்நாடகாவில் ரிலீசாக இருக்கிறது. அதுவும் 130 திரையரங்கங்களில். முன்னதாக ”காலா இங்கு ரிலீசானால் திரையரங்கங்களை சும்மா விட மாட்டோம்” என சவால் விட்டிருந்தனர் கன்னடர்கள்.

இதை தொடர்ந்து நேற்று தனுஷ் கர்நாடக நீதி மன்றத்தை அனுகியபோது கூட, எங்களால் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என கைவிரித்தது நீதிமன்றம். அதே போலதான் கர்நாடக முதல்வர் குமாரசாமியும் எது நடந்தாலும் நீங்க தான் பொறுப்பு. என தனுஷிற்கே செக் வைத்தார்.

ஆனால் இன்று காலையில் ரஜினி அளித்த பேட்டியின் போது, எல்லாம் நல்லபடியாக நடக்கும். கர்நாடகாவில் காலா ரிலீசுக்கு கன்னட சகோதரர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். என பேசி இருந்தார். அந்த பேட்டியில் அவர் பேசியது போல காலாவிற்கு சாதகமாக, இப்போது 130 திரையரங்கங்கள் காலாவை ரிலீஸ் செய்யவிருக்கின்றன. சூப்பர் ஸ்டார் யாரு?ன்னு காலா விவகாரத்தில் நிரூபித்துவிட்டார் ரஜினி. இதே மாதிரி இந்த காவிரி பிரச்சனைக்கும் அப்போவெ டீலிங் நடத்தியிருக்கலாமே ரஜினி சார்? என இப்போது கேள்வி எழுப்பி இருக்கின்றனர் மக்கள்.