மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விக்ரம் நடிக்கவுள்ள புதிய படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் இணைய இருக்கிறார். 

தமிழ் சினிமாவில் மல்டி ஸ்டார் படங்களை இயக்குவதில் தனி திறமையானவர் மணிரத்தினம். சமீபத்தில் இவர் இயக்கி இருந்த செக்க சிவந்த வானம் என்ற படத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என அனைவர்க்கும் சமமான கதாபாத்திரத்தை கொடுத்திருந்தார்.


இதனையடுத்து மணிரத்தினம் தனது நீண்ட நாள் ஆசையான பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவிய படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். ஏற்கனவே இந்த படத்தில் விக்ரம், சிம்பு நடிக்க ஒப்பு கொண்டுள்ளதை அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன், அவரது மருமகளான ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதிகாரபூர்வ தகவல்கள் வரும் பொங்கலுக்குள் வெளியாகலாம். இந்த படத்தில் சிம்பு, விக்ரம், அமிதாப் பச்சன் என மிக பெரிய நடிகர் பட்டாளமே நடிக்க இருப்பதால் இந்திய அளவில் பேசப்படும் படமாக இருக்கப்போவது உறுதி.