சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் '2.௦' திரைப்படம் மற்றும் காலா ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் தற்போது ரஜினிகாந்த் அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அதே நேரத்தில் திரைப்படம் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் இவர் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில், நடிக்க முடிவெடுத்துள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியானது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த திரைப்படம் குறித்து அவ்வப்போது பல சவாரிஸ்ய தகவல்கள் வெளியாகி வருகிறாது. தற்போது வெளியாகியுள்ள தகவலில் பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. 

இவர் பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களான 'பாஜ்ராங்கி பைஜான்', 'ராயீஸ்' உள்ளிட்ட பல படங்களில் சிறப்பாக நடித்து பல விருத்திகளை பெற்றவர்.

நவாசுதீனை தமிழில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் அணுகிய போது சிறந்த கதை மற்றும் வலுவான கதாப்பாத்திரம் அமையாததால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க மறுத்து வந்தார். 

எப்போதும் ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதை வழக்கமாக கொண்ட இவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதால் கண்டிப்பாக இந்த திரைப்படம் வித்தியாசமான கதை களத்தை கொண்ட படமாக இருக்கும் என அறியப்படுகிறது.

மேலும் கார்த்தி சுப்புராஜின் இந்த படத்தில் ரஜினி மற்றும் நவாசுதீன் மோதும் காட்சிகள் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்றும், இவர்கள் இருவரை சுற்றியே முழுக்கதையும் நகரும் என்று படக்குழுவினரிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.