தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக உள்ள வெங்கடேஷின் மகளுக்கு காதல் திருமணம் நடைபெற உள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷின் மகள் அஷ்ரிதா. இவர் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியது. 

தெலுங்கு திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் வெங்கடேஷ். ஆக்சன் ஹீரோவாக நடித்து கலக்கியுள்ளார்.  ஒரு சில  தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளதால், இவர் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர். 

மேலும், வெங்கடேஷ் நடிப்பில் தெலுங்கில் வெளியான படங்கள் பல தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் தனுஷ் – நயன்தாரா நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி திரைப்படம் கூட வெங்கடேஷ் நயன்தாரா நடிப்பில் தெலுங்கில் வெளியானது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அஷ்ரிதா காதலிக்கும் நபர் யார் என்பது குறித்து தற்போது தகவலும் வெளியாகியுள்ளது. இவர் பிரபல தொழிலதிபரும், ஹைதராபாத் ரேஸ் கிளப் தலைவருமான ஆர். சுரேந்தர் ரெட்டி யின் பேரனை தான் அர்ஷிதா காதலித்து வருகிறாராம். இவரது மகன் ரகுராம் ரெட்டி, ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் கிரன் குமார் ரெட்டி க்கு மிகவும் நெருக்கமானவர். இருவரும் நீண்ட காலமாகப் பழகி வருவதாகவும் கூறப்படுகிறது. 

இருவருமே தங்கள் காதலை வீட்டில் சொல்லி விட்டதாகவும் இதற்கு இரு வீட்டினரும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக வெங்கடேஷின் சகோதரர் சுரேஷ்பாபு அஷ்ரிதாவின் காதலன் வீட்டுக்கு சென்று பேசி வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. வெங்கடேஷ் தற்போது அணில் ரவி புடி இயக்கத்தில் ப்ராக் என்ற படத்தில் நடித்து வருகிறார். 
   
 இன்னும் இரு தினங்களில் ஹைதராபாத் திரும்பும் வெங்கடேஷ் மகளின் நிச்சயதார்த்தம் வேலைகளை தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.