சென்னை திரும்பிய கையோடு மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்று பெரும்பாலான காட்சிகளை நடித்து முடித்துவிட்டார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீயாய் நடைபெற்று வருகிறது. மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடைபெற படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது படக்குழுவை சேர்ந்த சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் ரஜினிகாந்திற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்றே வந்த போதும், ரத்த அழுத்தமாறுபாடு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் சில மாத ஓய்விற்கு பிறகு ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த பட ஷூட்டிங்கில் பங்கேற்ற ரஜினிகாந்த், வழக்கமான உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார். 

அங்கு சில நாட்கள் தங்கி மருத்துவ பரிசோதனைகளை எல்லாம் முடித்துக் கொண்ட சூப்பர் ஸ்டார், சென்னை திரும்பிய கையோடு மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்று பெரும்பாலான காட்சிகளை நடித்து முடித்துவிட்டார். தற்போது டப்பிங் பணிகள் தீவிரமாக பங்கேற்று வருகிறார். தற்போது ரஜினி மருத்துவர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. வழக்கமாக தனது பல்லை பரிசோதித்து வரும் ரஜினி இந்த முறையும் அதற்காக மருத்துவரை சந்தித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.