கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை மக்களுக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின்  மூலம் தெரிவித்துள்ளார்.

"இது குறித்து அவர் வெளியிட்டுள்ளதாவது... இந்த புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும். இந்த துயரமான நேரத்தில் உயிரை பணையம் வைத்து மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும், ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். அரசாங்கம் விதிக்கும் கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள் என தன்னுடைய வாழ்த்துக்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதல் முறையாக 'அண்ணாத்த' படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா வைரஸின் தாக்கத்தால் முற்றிலும் முடங்கியுள்ளது.

இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு மகளாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.  அதேபோல் நீண்ட இடைவேளைக்குப்பின் ரஜினியுடன் நடிகை மீனா, குஷ்பு  போன்ற பலர் இப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.மேலும் சமீபத்தில் வெளியான தகவலின்,  தலைவரின் 169 ஆவது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும், இந்தப்படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.