அவர் அறிஞருக்கு அறிஞர்.. பாமரனுக்கு பாமரன்.. Kalaingar 100 விழா - கருணாநிதிக்கு புகழாரம் சூட்டிய ரஜினிகாந்த்!

Rajinikanth in Kalaingar 100 : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று சென்னையில் நடைபெற்ற கலைஞர் 100 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலைஞர் குறித்து பேசியுள்ளார்.

Super Star Rajinikanth Speech about Karunanithi in Kalaingar 100 function in chennai ans

சென்னையில் கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று கலைஞர் நூற்றாண்டு விழா விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. ஆனால் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த விழாவில் பங்கேற்றபோதும் பெரிய அளவில் மக்கள் கூடவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் நிகழ்ச்சிக்கு வருகைதரவில்லை. 

அதே நேரத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், சூர்யா, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, கருணாஸ், வடிவேலு மற்றும் நடிகைகள் ஜெயசுதா, கவுதமி, ரோஜா, நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கலைஞர் குறித்த தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். 

"வாங்க மன்மதராசா" என்றழைத்த கருணாநிதி - கலைஞர் 100 விழாவில் நெகிழ்ந்து பேசிய "கேப்டன் மில்லர்"!

மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், கலைஞர் கருணாநிதி தன்னை மன்மத ராசா வாங்க என்று அழைத்ததை நினைவுகூர்ந்து பேசினார். மேலும் அவரை தொடர்ந்து பேசிய நடிகர் சூர்யா அவர்களும் கலைஞர் கருணாநிதி குறித்த பல நினைவுகளை மேடையில் பகிர்ந்துகொண்டார். அவரை தொடர்ந்து பேசிய உலக நாயகன் கமல்ஹாசன், கலைஞருடனான தனது பயணம் குறித்து பேசினார்.

இறுதியில் மேடையில் ஏறி பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.  "சிலர் தங்களுடைய அறிவை பறைசாற்றுவதற்காக பேசுவார்கள், ஆனால் அது மற்றவர்களுக்கு புரியுமா? புரியாதா? என்று யோசிக்க மாட்டார்கள். ஆனால் கலைஞர் அப்படி அல்ல.. அவர் அறிஞர் சபையில் பேசும்போது அறிஞராகவும், கவிஞர் சபையில் பேசும் பொழுது கவிஞராகவும், பாமரர்களிடம் பேசும் பொழுது பாமரராகவும் பேசுவார் என்று அவருக்கு புகழாரம் சூட்டினார்.

வெகுநாள் கழித்து டோலிவுட் செல்லும் இசைப்புயல்.. ராம் சரன் தான் ஹீரோ - அந்த படத்தில் இணைந்த "சூப்பர் ஸ்டார்"!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios