ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வணிக நிறுவனங்கள் கடைகள் என எதுவும் இரவு 8 மணிக்கு மேல் செயல்பட அனுமதி இல்லை. இந்த நிலையில் கடந்த 19ந் தேதி சாத்தான்குளம் பேருந்து நிலையம் அருகே கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதா? என்பதை காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உறுதி செய்ய வந்துள்ளார். அப்போது ஜெயராஜ் என்பவர் தனது செல்போன் கடையை மூடாமல் திறந்து வைத்திருந்தாக கூறப்படுகிறது. அப்போது கடையை உடனடியாக மூடுமாறு பாலகிருஷ்ணன், ஜெயராஜை கூறியுள்ளார்.

அப்போது ஜெயராஜுக்கும் எஸ்.ஐ. பாலகிருஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் போலீசையே எதிர்த்து பேசுறீயா? எனக்கூறி, ஜெயராஜை சட்டையைப் பிடித்து இழுத்து காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளார். இதைப்பார்த்த பென்னீஸ் ஏன் எங்க அப்பாவை இப்படி இழுத்து போறீங்க? என கேட்க அவரையும் காவல்நிலையம் வா எனக்கூறிவிட்டு சென்றுள்ளார். காவல் நிலையத்தில் வைத்து ஜெயராஜை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த பென்னீஸ் தனது அப்பாவின் நிலையை பார்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உடனே அவரையும் போலீசார் சரமாரியாக தாக்கியுள்ளனர். 

இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும், கோவில்பட்டி கிளை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு முதலில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பென்னீஸ் மாரடைப்பால் உயிரிழந்தார். மறுநாள் அவரது தந்தை ஜெயராஜ் மரணமடைந்தார். இந்த தம்பவம் இந்தியாவில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

ஊரடங்கிலும், உயிரை பணையம் வைத்து மக்களை காப்பற்றுகிறார்கள் என போலீசாரை புகழ்ந்த பலர், அவர்களுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து, நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் பலர் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சூர்யா இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கில் பாதிக்கபப்ட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என தொடர்ந்து பலர் வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் திமுக சார்பாக , எம்.பி. கனிமொழி, ஜெயராஜ் குடும்பத்தினரை சந்தித்து ரூபாய் .25 லட்சம் உதவி தொகையை வழங்கினார். அதே போல் அதிமுக சார்பிலும் உதவி தொகை வழங்கப்பட்டது.

சூர்யா, கமல், உள்ளிட்ட பலர் அறிக்கை மூலம் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாதிக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நண்பர் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதனை ரஜினிகாந்தின் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.