சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக ரகசியமாக செய்யும் பல விஷயங்கள் மறுகணமே சோசியல் மீட்யாவில் வெளியாகி வைரலாகி விடும். குறிப்பாக தனது ரசிகர்களுக்கு ஏதாவது உதவினாலோ, உற்சாகப்படுத்தினாலோ உடனடியாக வெளியாகிவிடுகிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது ரசிகருக்காக உருக்கமாக பேசிய ஆடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

 

இதையும் படிங்க: “இது சூர்யா, ஜோதிகா, சிவக்குமாரின் கூட்டுச்சதி”... மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் பரபரப்பு புகார்!

நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான முரளி என்பவர், மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சமீபத்தில் தனது கடைசி ஆசையை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில்,  “தலைவா என் இறுதி ஆசையானது, 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25K என்ற நிலை உருவாக்கி கொடு. உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்” என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் முரளிக்காக நடிகர் ரஜினிகாந்த் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், முரளி நான் ரஜினிகாந்த் பேசுறேன் கண்ணா. உங்களுக்கு ஒன்னும் ஆகாது கண்ணா! தைரியமா இருங்க.. நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்… சீக்கிரம் குணம் அடைஞ்சு நீங்க வீட்டுக்கு வந்துருவீங்க. நீங்க குணமடைஞ்சு வந்த பிறகு, ப்ளீஸ், என் வீட்டுக்கு குடும்பத்தோட வாங்க… நான் உங்களை பாக்குறேன்… தைரியமா இருங்க… நான் ஆண்டவனை வேண்டிக்கிறேன். தைரியமா இரு கண்ணா… தைரியமா இரு” என பேசியுள்ளார். 

இதையும் படிங்க: என்னது நடிகர் விஷால் அப்பாவா இது?... 82 வயசிலும் உடம்பை எப்படி கட்டுமஸ்தா வச்சியிருக்கார் பாருங்க....!

இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நபர் தொற்றிலிருந்து மீண்டு விட்டதாக பதிவிட்டுள்ளார். ஆசிர்வாதம் கிடைத்தது, அதிசயம் நடந்தது அற்புதம் நிகழ்ந்தது.  கொரோனா நெகடிவ் வந்தது. தலைவர் காவலர்களின் பிரார்த்தனையால் எனது கிட்னி யும் சரி ஆகி மீண்டும் பழைய நிலைக்கு வருவேன். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.