தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் செல்போன் கடை நடத்தி வந்தனர். ஊரடங்கு நேரத்தில் கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்ததற்காக போலீசார் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவல் நிலையத்தில் வைத்து தந்தை, மகனை கொடூரமாக தாக்கிய போலீசார், மறுநாள் கோவில் பட்டி கிளை சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட அப்பா மற்றும் மகன் உடல்நலக் கோளாறு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் போலீசாரின் தாக்குதலால் தான் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தந்தை, மகனின் இந்த கொடூர மரணத்திற்கு நீதி கேட்டு தமிழக மக்கள் கொந்தளித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவிக்காதது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. 

 

இதையும் படிங்க: படுக்கையறையில் கணவருக்கு லிப்லாக்... முத்த போட்டோவிற்கு புதுவித விளக்கம் கொடுத்த வனிதா...!

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் மரண விவகாரம் தொடர்பாக சூப்பர் ஸ்டார் ட்வீட் செய்திருந்தார். தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது. #சத்தியமா_விடவே_கூடாது என குறிப்பிட்டிருந்தார். 

இதையும் படிங்க: ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் செம்ம கிளாமர்... 49 வயசிலும் கவர்ச்சியில் குறை வைக்காத ரம்யா கிருஷ்ணன்...!

ரஜினிகாந்த் அந்த ட்வீட்டுடன் சேர்ந்து #சத்தியமா_விடவே_கூடாது என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டிருந்தார். சூப்பர் ஸ்டார் இந்த ட்வீட்டை பதிவு செய்த சில நிமிடங்களிலேயே அந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாக ஆரம்பித்துவிட்டது. காலை முதலே அந்த ஹேஷ்டேக் தான் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்டு பல ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வரும் இந்த சூழ்நிலையில், சூப்பர் ஸ்டார் பதிவிட்ட #சத்தியமா_விடவே_கூடாது என்ற ஹேஷ்டேக் கெத்து காட்டி வருகிறது.