எப்போது அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தான் போட்டி போடுவது வழக்கம். ஆனால் இந்த வருடமோ கொஞ்சம் வித்தியாசமாக ரஜினி ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. 

இதற்கு காரணம் இந்த வருடம் பொங்கல் திருவிழாவிற்கு அஜித் நடித்த 'விஸ்வாசம்', திரைப்படமும் ரஜினி நடித்த 'பேட்ட' திரைப்படமும் வெளியாக உள்ளது. 

மேலும் இருதரப்பு ரசிகர்களை குஷியாக்கும் வகையில், தொடர்ந்து படக்குழுவினர், படத்தின் போஸ்டர்கள், பாடல்கள், மற்றும் லிரிக்கல் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். நேற்றைய தினம் கூட ' விஸ்வாசம்' படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணான கண்ணே  லிரிக்கல் வீடியோ பாடல் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. 

இந்நிலையில் 'விஸ்வாசம்' படத்தின் டீசர் முதலில் வெளியாகுமா அல்லது 'பேட்ட' படத்தின் ட்ரைலர் முதலில் வெளியாகுமா? என அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது நாளை காலை சரியாக 11 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் டிரைலர் வெளியாகும் என சன் பிச்சர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது. அடுத்த வாரத்தில் விஸ்வாசம் டீஸர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.