Asianet News TamilAsianet News Tamil

'அண்ணாத்த' முடிந்த கையேடு 2 இளம் இயக்குனர்கள் படத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'அண்ணாத்த' படத்தில் நடித்து முடித்த பின், இரண்டு இளம் இயக்குனர்கள் இயக்கத்தில், நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
 

super star rajinikanth next acting young directors film?
Author
Chennai, First Published Mar 7, 2021, 12:17 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'அண்ணாத்த' படத்தில் நடித்து முடித்த பின், இரண்டு இளம் இயக்குனர்கள் இயக்கத்தில், நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்த போது, கொரோனா தொற்றால் படக்குழுவினர் சிலர் பாதிக்கப்பட்டதால் மீண்டும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், மார்ச் 15-ஆம் தேதி முதல் சென்னையில், படப்பிடிப்பு துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

super star rajinikanth next acting young directors film?

30 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பை முடித்த கையேடு, வடமாநிலங்களிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு உடல்நிலை நலமில்லாத போது 'அண்ணாத்த' படம் தன்னுடைய கடைசி படமாக இருந்துவிடக் கூடாது என நண்பர்களிடம் கண் கலங்கிய நிலையில், தற்போது மீண்டும் அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கதை கேட்டு வருவதாகவும் ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

super star rajinikanth next acting young directors film?

அதன்படி அண்ணாத்த படத்தை அடுத்து இரண்டு இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளாராம். ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று சென்னை வந்தபின், நல்ல உடல் நலத்துடன் இருக்கும் ரஜினிகாந்த், இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவிற்கு வருகை தந்தது மட்டுமின்றி தனுஷின் புது வீட்டு பூஜையிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios