தலைவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பல வெறித்தனமான ரசிகர்கள் இருக்கின்றனர். தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மற்றும் உலக அளவில் அவருக்கான ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றனர்.

மேலும் சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அமெரிக்கா, ஜப்பான், மலேசியா, போன்ற பல நாடுகளில் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில்,  ஓய்வில் இருக்கிறார் தலைவர்.

மேலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன்னுடைய ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் இவருடைய தீவிர ரசிகரான மதுரையை சேர்ந்த சுந்தர் என்பவரை சந்தித்துள்ளார். ஓவியரான சுந்தர் சூப்பர்ஸ்டார் தலைவரின் புகைப்படத்தை அவருக்கு பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார்.

தன்னுடைய மனைவி, மகள் என குடும்பத்தையும் அழைத்து வந்து தலைவரை சந்தித்து சில நிமிடங்கள் பேசியுள்ளார் சுந்தர். அப்போது சுந்தரை கட்டியணைத்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி உள்ள சூப்பர்ஸ்டாரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.