ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள "தர்பார்" திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. உலகம் முழுவதும் 7 ஆயிரம் ஸ்கீரின்களில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ள "தர்பார்" படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் லைகா நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் நேற்று சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக "தர்பார்" படத்தின் அசத்தல் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட அந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. 

"தர்பார்" படத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் மாஸ் காட்டியிருக்கிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளதால், "தர்பார்" படத்தை காண அவரது ரசிகர்கள் மரண வெயிட்டிங். 

இந்த சமயத்தில் "தர்பார்" படத்தின் ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் ஷோவை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருப்பதாக கூறி, அப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் மாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சூப்பர் ஸ்டாரும், அவரது மகளாக நடித்துள்ள நிவேதா தாமஸும் டான்ஸ் ஆடும்  வீடியோ பட்டையைக் கிளப்பி வருகிறது. 

படு மாஸாக டான்ஸ் ஆடும் ரஜினி, ஆடிக்கொண்டே ரவுடிகளை அடித்து தும்சம் செய்கிறார். புரோமோஷன் வீடியோவை வெளியிட்டே ரசிகர்களை வெறியாக்கி வருகிறது "தர்பார்" படக்குழு. இதனால் "தர்பார்" படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.