தமிழில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, அதன் பின்னர் 1991ம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான “ராசாவின் மனசிலே” படத்தின் மூலம் ஹீரோயினாக உயர்ந்தவர் நடிகை மீனா. அதன் பின்னர் ரஜினி, கமல், சரத்குமார், பிரபு என அப்போதைய உச்ச நட்சத்திரங்களின் முன்னணி ஜோடியாக வலம் வந்தார். அடங்க ஒடுக்கமான குடும்ப பெண்ணாக இருந்தாலும் சரி, அல்ட்ரா மார்டன் லுக்கில் கலக்குவதானாலும் சரி எந்த கேரக்டருக்கும் கச்சிதமாக பொருந்தினார். அதனால் தான் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 

இதையும் படிங்க: சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டியா இது?... இளம் வயதிலேயே கவர்ச்சியில் ஓவர் தாராளம் காட்டிய போட்டோ....!

90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த மீனா, தளபதி விஜய்யுடன் “ஷாஜகான்” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அந்த பாட்டும் பட்டி, தொட்டி எல்லாம் செம்ம ஹிட்டானது. திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த மீனா, குழந்தை பிறந்த பிறகு ஓவராக வெயிட் போட்டு குண்டானார். அதன் பின்னர் சில விளம்பர படங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். 

இதையும் படிங்க: “கமலும், சோவும் சிரிச்சப்ப எங்க போனீங்க... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக வைரலாகும் வீடியோ...!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன்‘முத்து’, ‘வீரா’,‘எஜமான்’ஆகிய சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள மீனா, 24 வருடங்களுக்குப் பிறகு “அண்ணாத்த” படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மீனா தான் ஜோடி என்று கூறப்படுகிறது. இந்நிலையில் முதன் முறையாக மீனா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் மலரும் நினைவுகள் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். 

இதையும் படிங்க: கவர்ச்சியில் கரை கண்ட நயன்தாரா...தினுசு தினுசாய் ஹாட் போஸ் கொடுத்து அசத்திய கிளிக்ஸ்...!

1984ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இந்த படத்தின் சுவாரஸ்யமான நினைவுகள் குறித்து மீனா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தன்னுடைய குண்டான உருவத்தை பார்த்த ரஜினிகாந்த், தனது அம்மாவிடம் எந்தக் கடையில் அரிசி வாங்குகிறீர்கள் என்று கேட்டு கிண்டலடித்ததாக தெரிவித்துள்ளார். இதுவரை ரஜினிகாந்த் தன்னை கிண்டலடித்த ரகசியத்தை வெளியில் சொல்லாமல் இருந்த மீனா, படம் வெளியான 36 ஆண்டுகள் ஆன பிறகு மனம் திறந்துள்ளார்.