தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனாவில் இருந்து மீள வேண்டுமென இன்று 6 மணி முதல் 6 :05 வரை கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளது. அதற்கு திரைத்துறையினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த கூட்டு பிராத்தனைக்கு அனைவரும் ஆதரவு கொடுத்து... எஸ்.பி.பி உடல் நலம் தேறி வர வேண்டும் என முழு மனதுடன் கடவுளிடம் வேண்டிக்கொண்டால் நிச்சயம் அவர் மீண்டும், உடல் நலம் தேறி வருவார் என இசைஞானி இளையராஜா, பாரதி ராஜா, ஏ.ஆர்.முருகதாஸ், ஜி.வி.பிரகாஷ் குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் தங்களுடைய ஆதரவை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் எஸ்.பி.பி.யின் உற்ற நண்பர்களில் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாடுநிலா எழுந்து வா... என கூறி, எஸ்.பி.பி யின் கூட்டு பிராத்தனைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 6 மணிமுதல் 6 :05 மணிவரை நடைபெற உள்ள இந்த கூட்டு பிராத்தனையில் கலந்து கொண்டு மீண்டும் எஸ்.பி.பியை மீட்டெடுப்போம் என தெரிவித்துள்ளார்.