உலக நாயகன் கமலின் 65 வது பிறந்தநாள் மற்றும் 60 வது ஆண்டு கலையுலக சாதனையை முன்னிட்டு நடந்த இளையராஜா இசை நிகழ்ச்சியில் ஏராளமான திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர். நேற்று மாலை  சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அந்நிகழ்வில் ரஜினிகாந்த், சிவக்குமார், சரத்குமார், பிரபு, சத்யராஜ், பார்த்திபன், விஜய் சேதுபதி, கார்த்தி, ஜெயம் ரவி, வடிவேலு, விக்ரம் பிரபு, நடிகைகள் லதா, ஸ்ரீபிரியா, மீனா, ரேகா, ராதா, அம்பிகா, மனிஷா கொய்ராலா, தமன்னா, லிசி, குட்டி பத்மினி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷங்கர், மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், சேரன், அமீர்,பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆருயிர் நண்பர் கமல் ஹாசனின் விழாவில் பங்கேற்பதற்காக தனது தடலாடி நடையில் வந்தார் ரஜினிகாந்த். மின்னல் வேகத்தில் நடந்து வந்த ரஜினிகாந்த், பாதை மாறி நேராக சென்றுவிட்டார். உடன் வந்த நபர்கள் ரஜினியை அழைத்து பாத இந்த பக்கம் இருக்கு தலைவரே என அழைத்துச் சென்றனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள் சூப்பர் ஸ்டாரை கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

ரஜினி வழக்கமாக கூறும் என் வழி தனி வழி டைலாக்கை வைத்து மரண பங்கம் செய்து வருகின்றனர். மேலும்  வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கூலிங்கிளாஸ் அணிந்து வரும் சிவகார்த்திகேயனைப் பார்த்து பாத இந்த பக்கம் இருக்கு தலைவரே என சூரி நக்கலடித்திருப்பார். அந்த வீடியோவையும், ரஜினி வழி மாறி போகும் வீடியோவையும் வைத்து நெட்டிசன்கள் தயாரித்துள்ள மீம்ஸ் செம்ம வைரலாகி வருகிறது.