பாரிஸில் உள்ள கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான "தர்பார்" திரைப்படம் கலவையான விமர்சனங்களையும் கடந்து, தியேட்டர்களில் வெற்றிவாகை சூடி வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் பட்டையைக் கிளப்பியிருந்தார் ரஜினி. அத்தனை ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் ஒற்றை ஆளாக தாங்கி நின்றார். ஆக்ஷன் காட்சிகளில் ருத்ர தாண்டவமும், சென்டிமெண்ட் காட்சிகளில் மனதை கரையவும் வைத்தார்.

70 வயதாகும் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலையும், எனர்ஜியையும் பார்த்து இளம் நடிகர்கள் பலரும் டரியல் ஆகிவிட்டனர். அந்த அளவுக்கு இம்மியளவும் குறைவில்லாமல் நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். நயனுக்கு பெரிதாக வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற ரசிகர்களின் குமுறலைத் தவிர, வேற எந்த பிரச்சனைகளும் ரசிகர்களின் தரப்பில் இருந்து கூறப்படவில்லை.

இதையும் படிங்க: "திரெளபதி" படம் ஒரு குப்பை... மோகன் ஜியுடன் டுவிட்டரில் கட்டிப்புரளும் பிரபல இயக்குநர்..!
இதனிடையே பாரிஸில் உள்ள கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கான கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் சூப்பர் ஸ்டாரின் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. 2.o,கபாலி, பேட்ட படத்தை தொடர்ந்து தற்போது தர்பார் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக விஜய்யின் சர்கார், மெர்சல், அஜித்தின் விஸ்வாசம், பாகுபலி போன்ற படங்களும் இதே திரையரங்கில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அங்கு அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்படுவது, அவரது ரசிகர்களை செம்ம உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
