"பழைய வண்ணாரப்பேட்டை" திரைப்பட இயக்குநர் மோகன் இரண்டாவது படமாக "திரெளபதி"  படத்தை இயக்கியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டிரெய்லர் பரபரப்பை கிளப்பியது. ட்ரெய்லரில் இடம் பெற்ற வசனங்களும், காட்சிகளும் மற்றொரு தரப்பினரின் நாடக காதலை தோலுரிக்கும் விதமாக இருப்பதாக கூறப்பட்டது. 

 

இதையும் படிங்க: தர்பாரை தவிக்க விட்ட "திரெளபதி"... சாதியக் காதலை சாடுவதற்கு கூடும் ஆதரவு... இதுவே ஆதாரம்...!.

தமிழ் சினிமாவில் முதன் முறையாக க்ரவுட் பண்டிங் முறையில் தயாராகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியான முதல் நாளில் இருந்தே ஆதரவும், எதிர்ப்பும் சரி அளவில் கிளம்பியுள்ளது. அஜித்தின் மைத்துனரான ரிஷி ரிச்சர்ட், ஷீலா ஆகியோர் நடித்துள்ளனர். என்ன தான் நாடக காதலை தோலுரிக்கும் விதமாக படத்தின் கதை இருப்பதாக கூறப்பட்டாலும், சர்ச்சையை தூண்டும் விதமாக உள்ள வசனங்களுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் மூடர்கூடம் பட இயக்குநர் நவீனிடம் "திரெளபதி படம் குறித்து கருத்து கூறுங்கள்" என அவரது ரசிகர் ஒருவர் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு குப்பைகள் குறித்து கருத்து வேற சொல்லனுமா? என கடுப்பாக பதிலளித்துள்ளார். 

நவீனின் அந்த ட்வீட்டிற்கு பதிலளித்துள்ள திரெளபதி படத்தின் இயக்குநர் மோகன்.ஜி. அவர், அவர் எண்ணம் போல அவர் கருத்து அமையும். எண்ணம் போல வாழ்க்கை. பல காவியங்கள் படைத்திட வாழ்த்துக்கள் டோலர்... என்று பதிவிட்டுள்ளார். இரு இயக்குநர்களின் டுவிட்டர்  பதிவிற்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.