பழைய வண்ணாரப்பேட்டை திரைப்பட இயக்குநர் மோகன் இரண்டாவது படமான திரெளபதி திரைப்படத்தை இயக்கியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டிரெய்லர் பரபரப்பை கிளப்பியது. ட்ரெய்லரில் இடம் பெற்ற வசனங்களும், காட்சிகளும் மற்றொரு தரப்பினரின் நாடக காதலை தோலுரிக்கும் விதமாக இருப்பதாக கூறப்பட்டது. 

சாதிகள் உள்ளதடி பாப்பா, அடித்தால் திருப்பி அடி ஆகிய வாசகங்கள் உடன் போஸ்டர் வெளியான போதே திரெளபதி பரபரப்பை கிளப்பப்போவது உறுதி என முடிவானது.  இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. நாடக காதலுக்கு எதிரான காட்சிகளும், வசனங்களும் வெளிப்படையாக பயன்படுத்தப்பட்டுள்ளதால், பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது. டிரைலர் வெளியான சில மணி நேரங்களில் யூடியூப் டிரெண்டிங்கில் 10 லட்சம் பார்வையாளர்களை தாண்டி விட்டது.

தமிழ் சினிமா வரலாற்றில், க்ரவுட் பண்டிங் முறையில் தயாராகியுள்ள இந்த படத்திற்கு கிடைத்துள்ள ஆதரவு பெரும்பாலானோரை வாய் பிளக்க வைத்துள்ளது. சாதிய காதலை சாடியதால் திரெளபதி படத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. அதே சமயத்தில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வரும் 9ம் தேதி வெளியாக உள்ள தர்பார் படத்தின் ட்ரெய்லர் சாதனையை திரெளபதி படம் தட்டித் தூக்கியுள்ளது. "தர்பார்" படத்தின் சும்மா கிழி வீடியோ பாடல் அளவிற்கு வீயூஸ்களையும், லைக்குகளையும் குவித்து வருகிறது. சின்ன பட்ஜெட் படமான திரெளபதி படத்திற்கு கிடைத்துள்ள் வரவேற்பு சூப்பர் ஸ்டார் ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது.