நடிப்பு, பாடல் என இரு பரிமாணங்களிலும் ரசிககர்களை மகிழ்வித்த இன்னிசை பாடகர் எஸ்.பி.பி மறைவு, உலகெங்கிலும் உள்ள இவருடைய ஒட்டு மொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து இவருடைய மறைவுக்கு பல பிரபலங்கள் தங்களுடைய, இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வீடியோ ஒன்றை வெளியிட்டு எஸ்.பி.பி பற்றிய நினைவுகளை பகிர்ந்து, தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது, இன்று மிகவும் சோகமான நாள், கடைசி நிமிடம் வரைக்கும் உயிருக்காக போராடி மதிப்பிற்குரிய திரு எஸ்.பி.பி அவர்கள் இன்று நம்மை விட்டு பிரிந்துவிட்டார்கள். அவருடைய பிரிவு மிகுந்த வேதனையாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. எஸ்.பி.பியின் பாட்டுக்கும் அவருடைய குரலுக்கும் இந்தியாவில் பல ரசிகர்கள் உள்ளனர்.

அவரை பற்றி தெரிந்தவர்கள் அவர் பாடலை விட அவரை மிகவும் அதிகமாக நேசித்தார்கள் அதற்கு காரணம், அவருடைய மனித நேயம். அவர் எல்லோரையும் சின்னவங்க, பெரியவங்க என்பது பார்க்காமல் மதிச்சாங்க, கௌரவ படுத்துனாங்க அன்பு கொடுத்தாங்க. அவ்வளவு அன்பான அருமையான ஒரு மனிதர். இந்திய திரையுலகம் எத்தனையோ மிகப்பெரிய பாடகர்களை உருவாக்கி உள்ளது. என சிலரை பெயரை கூறி, அவர்கள் அனைவருக்கும் இல்லாத ஒரு சிறப்பு நம் எஸ்.பி.பி அவர்களுக்கு உண்டு.

அது என்னவென்றால், இந்த தலைதிறந்த பாடகர்கள் அவர்களுடைய மொழியில் மட்டும் தான் பல பாடங்களை பாடினார்கள். ஆனால் எஸ்.பி.பி பல மொழியில் பாடியுள்ளார். அவருடைய இனிமையான, கம்பீரமான குரல் இன்னும் 100  ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் ஒளித்து கொண்டே இருக்கும். ஆனால் அந்த குரலின் சொந்தக்காரர் இல்லை என்பது மிகுந்த வருத்தம். அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் என இந்த  வீடியோவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.