ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் "தர்பார்" படத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்க உள்ள "தலைவர் 168" படத்தில் நடிக்க உள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள அந்த படத்திற்கான பூஜை, நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த பூஜையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குஷ்பூ, மீனா, இமான், இயக்குநர் சிறுத்தை சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பூஜையில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்கவில்லை, அதற்கு பதிலாக ஐதராபாத்தில் டிசம்பர் 17ம் முதல்  ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற உள்ள ஷூட்டிங்கில் அவர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு செம்ம பர்த்டே ட்ரீட்... ரஜினி - சிம்ரன் ரொமான்ஸ் வீடியோ... வைரலாகும் "பேட்ட" டெலிடேட் சீன்

இதனிடையே, வழக்கமாக பிறந்தநாளின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சென்னையில் இருக்க மாட்டார். எனவே பூஜை முடிந்த கையோடு தலைவர் 168 படக்குழுவினருடன் சேர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். "தலைவர் 168" இயக்குநர் சிறுத்தை சிவாவிற்கு சூப்பர் ஸ்டார் கேக் ஊட்டி விடும் வீடியோவை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.  

 

மேலும் இயக்குநர் சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் டி.இமான், பரோட்டா சூரி உள்ளிட்டோர் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் வீடியோவையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.