கடந்த டிசம்பர் 12ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். அன்றைய தினம் தலைவர் தரிசனத்திற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் போயஸ் கார்டன் வாசலில் குவித்தனர். ஆனால் அன்றைய தினம் ரஜினிகாந்த் அங்கு இல்லாததால் விதவிதமான கெட்டப்புக்களில் வந்த அவர்கள் அனைவரும் மிகப்பெரிய ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். 

 

இதையும் படிங்க: விஜே சித்ரா தற்கொலை... போலீசாரிடம் ஹேமந்த் அளித்த அதிர்ச்சி தகவல்கள்...!

இதனிடையே சூப்பர் ஸ்டாருக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை என்பதை குறிக்கும் விதமான Now or never என்று எழுதப்பட்ட கேக்கை தனது பேரன்கள் மற்றும் குடும்பத்தினருடன் வெட்டி, ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது. இதையடுத்து நேற்று அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனி விமானம் மூலமாக ஐதராபாத் கிளம்பிச் சென்றார். 

 

இதையும் படிங்க: தலைவருடன் நடிக்க தனி விமானத்தில் பறந்த நயன்தாரா... கிழிந்த பேண்ட்,கூலிங் கிளாஸுடன் கெத்தாக சூப்பர் ஸ்டார்...!

டிசம்பர் 31ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதற்கு முன்னதாக கைவசம் உள்ள அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுக்க முடிவெடுத்துள்ளார். அதற்காக தான் கொரோனாவையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பிற்கு கிளம்பிச் சென்றார். தனி விமானம் மூலம் சென்னை டூ ஐதராபாத் பறந்த ரஜினிகாந்த், அதிலிருந்த அண்ணாத்த படக்குழுவினர் மற்றும் விமான பணியாளர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...