Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் நடந்த 'அண்ணாத்த' ஷூட்டிங்! தலைவா... தலைவா என ஆர்ப்பரித்த ரசிகர்கள் வைரலாகும் வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த மே மாதம் நிறைவடைந்த நிலையில், சென்னையில் பிரபல மாலில் படப்பிடிப்பு எடுக்கப்பட்ட போது, ரசிகர்களால் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

super star rajinikanth annaatthe shooting spot video goes viral
Author
Chennai, First Published Jul 22, 2021, 11:33 AM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த மே மாதம் நிறைவடைந்த நிலையில், சென்னையில் பிரபல மாலில் படப்பிடிப்பு எடுக்கப்பட்ட போது, ரசிகர்களால் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள, 'அண்ணாத்த' திரைப்படம் லாக் டவுன் பிரச்சனைக்கு பின், மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கிய நிலையில், கடந்த மே மாதல் படத்தின் அனைத்து காட்சிகளும் எடுத்து முடிக்க பட்டு தலைவர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படக்குழுவிற்கு குட் பை சொல்லிவிட்டு தனி விமானத்தில் சென்னை திரும்பினார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன், சென்னையில் சுமார் 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.

super star rajinikanth annaatthe shooting spot video goes viral

பெருவாரியான காட்சிகள், கோகுலம் ஸ்டூடியோவில் செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்ட நிலையில், சில காட்சிகள் பிரபல மால் மற்றும் வேறு சில இடங்களில் எடுக்கப்பட்டது. இந்நிலையில் அப்படி ஷூட்டிங் நடுவே ரஜினிகாந்த் வெளியே வர, அவரை பார்த்து ரசிகர்கள் சிலர் தலைவா... தலைவா என ஆர்ப்பரிக்கும் வீடியோ வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

super star rajinikanth annaatthe shooting spot video goes viral

தற்போது 'அண்ணாத்த' படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், லாக் டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட போஸ்ட் புரோடக்ஷன் பணிகளும் மீண்டும் துவங்கி முழு வீச்சில் நடந்து வருகிறது. விரைவில் திரையரங்குகளுக்கு, கொரோனா கட்டுக்குள் வந்து கொண்டிருக்க அடுத்த மாதம் திரையரங்குகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த வருட தீபாவளியை மேலும் சிறப்பாக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' படம் வெளியாகும் என்பதை படக்குழு உறுதி செய்து, இதுகுறித்த போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இந்த மிகைழ்ச்சியான செய்தியை சன் பிச்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வரும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இதோ...


 

Follow Us:
Download App:
  • android
  • ios