super star daugther acting with jothika
பாலிவுட்டில் நடிகை வித்யா பாலன் நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'துமாரி சுலு' கடந்த ஆண்டில் பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
இந்த திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. இதில் நடிகை ஜோதிகா வித்யா பாலன் நடித்த கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் இதே படத்தில் பிரபல நடிகை லட்சுமிமஞ்சுவும் இணைத்துள்ளார். ஜோதிகா வேலைப் பார்க்கும் எப்.எம் வானொலியின் உயரதிகாரியாக நடிக்க உள்ளார். ஏற்கனவே இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் இவர் நடித்துள்ளார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தில் ஜோதிகாவின் கணவர் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவது யார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே இவர் நடித்த 36 வயதினிலே படத்தில் ரகுமானும், மகளிர் மட்டும் படத்தில் மாதவனும், நாச்சியார் படத்தில் டாக்டர் குருஷங்கரும் நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் யார்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் . 
ஜோதிகா நடிக்கும் இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
