சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்ட நிலையில், இவரது அடுத்த படம் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில், அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்ட நிலையில், இவரது அடுத்த படம் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில், அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்த 'அண்ணாத்த' திரைப்படம் ஷூட்டிங் பணிகள் கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலை காரணமாக சற்று தாமதம் ஆனாலும், மே மாதம்... ஒட்டு மொத்த படத்தையும் நடித்து முடித்துவிட்டார் தலைவர். இதை தொடர்ந்து, அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ மருத்துவமனையில் உடற்பரிசோதனைக்காக சென்று வந்த தலைவர்... கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன், ரஜினி மக்கள் மன்றத்தின் பொதுக்குழுவை கூடி, நற்பணி மன்றமாக மாற்றுவதாக தெரிவித்தார்.

இதனால் இனி அவர் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்பது தெரிவாகியுள்ள நிலையில், அடுத்தடுத்து 2 இளம் இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. அந்தவகையில், வெளியாகியுள்ள தகவலில், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில்... தலைவர் 169 ஆவது படத்தில் நடிக்க உள்ளதாகவும். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் வெளியான போது, படத்தை பார்த்துவிட்டு... இயக்குனரை சூப்பர் ஸ்டார் போன் செய்து வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது. எனவே விரைவில் தலைவரின் 169 ஆவது படம் குறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளது.

அந்த வகையில் தற்போது இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக, பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். ஏற்கனவே தீபிகா படுகோனே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா இயக்கிய 3d அனிமேஷன் படமான, 'கோச்சடையான்' படத்தின் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இதுவரை எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில் இந்த தகவல் உண்மையாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.