கிராமிய பாடல்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தம்பதிகள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதியினர்.இவர்களுடைய சிறப்பே கிராமிய பாடல்கள்தான்.

காதல்

செந்தில் கணேஷ் எம்.ஏ.பட்டதாரி.இருவரும் முதலில் ஒரே மேடையில் பாடல் பாடி அசத்தினார்கள்.பின் இவர்களுக்குள் காதல் ஏற்பட 2012 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.கிராமிய பாடல்களால் பிரபலமான இவர்கள் நிறைய நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக சென்றனர்.

நாயகன்

பின் செந்தில் கணேஷ் திருடு போகாத மனசு என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.அதில் ராஜலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேடை நிகழச்சிகளில் சந்தித்த பிரபலங்கள் மூலம் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகின்றனர்.

ஹைட்ரோ கார்பன்

இசை நிகழ்ச்சியை தாண்டி சமூக பிரச்சனைக்காகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கருவுற்ற நிலையில் ராஜலட்சுமி தனது கணவருடன் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

பாராட்டுகள்

இசை நிகழ்ச்சியை தாண்டி சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வரும் இந்த தம்பதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.