"பொன்னியின் செல்வன்" நடிகர்கள் லிஸ்ட்டில் ஜெயம் ரவியின் செல்லமகன் ஆரவ் ரவி புதிதாக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் வெளியான முதல் விண்வெளி படமான டிக்..டிக்..டிக் படத்தில் தந்தை ஜெயம் ரவியுடன் சேர்ந்து அசத்தியிருந்தார் ஆரவ். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் முக்கிய கதாபாத்திரமான வந்தியத்தேவன் கேரக்டரில் ஜெயரம் ரவி நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தில் குட்டி ஆரவ் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது இதுவரை புரியாத புதிராக உள்ளது.
மீண்டும் இணையும் தந்தை - மகன் சூப்பர் ஹிட் கூட்டணி - "பொன்னியின் செல்வன்" படத்தின் புதிய அப்டேட்...!
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை தமிழ், இந்தி,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படமாக்க எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இதில் நடிப்பதற்காக முன்னணி நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியானது. படத்தில் அமிதாப் பச்சன், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயராம் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் வெளியான மிகப்பெரிய வரலாற்று படமான பாகுபலியை முறியடிக்கும் வகையில், பிரம்மாண்டமாக "பொன்னியின் செல்வன்" உருவாக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு பாகங்களாக தயாராக உள்ள இந்த படத்தை லைகா புரோடக்ஷன் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்காக பிரம்மாண்ட அரண்மனை செட் போடப்படும் என்றும், அதில் 100 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. படப்பிடிப்பு குறித்து இன்னும் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக நிலையில், கதாபாத்திரங்களை செதுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இந்த சமயத்தில் "பொன்னியின் செல்வன்" படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
"பொன்னியின் செல்வன்" நடிகர்கள் லிஸ்ட்டில் ஜெயம் ரவியின் செல்லமகன் ஆரவ் ரவி புதிதாக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் வெளியான முதல் விண்வெளி படமான டிக்..டிக்..டிக் படத்தில் தந்தை ஜெயம் ரவியுடன் சேர்ந்து அசத்தியிருந்தார் ஆரவ். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் முக்கிய கதாபாத்திரமான வந்தியத்தேவன் கேரக்டரில் ஜெயரம் ரவி நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தில் குட்டி ஆரவ் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது இதுவரை புரியாத புதிராக உள்ளது. ஆரவ்வின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 6, 2019, 12:22 PM IST