இயக்குனர் தியாகராஜா குமாராஜா இயக்கத்தில், பல்வேறு எதிர்ப்பார்ப்புகள் மத்தியில் வெளியான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இதில் விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன், சமந்தா, பகத் பாசில் என பலர் நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடித்த  அனைவருமே வித்தியாசமான வேடத்தை துணிச்சலுடன் ஏற்று நடித்திருந்தனர். இதற்கு பலர் மத்தியில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் படத்திற்கு பத்திரையாளர்கள் மத்திலும் தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதோடு, ரசிகர்களையும் இப்படம் கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் சூப்பர் டீலக்ஸ் படத்தின் முதல்நாள் வசூல் எவ்வளவு இருக்கும் என்கிற,  தோராய தகவல் வெளியாகியுள்ளது. 

இதில் சென்னையில் சூப்பர் டீலக்ஸ் ரூ 45 லட்சம் வரை முதல் நாள் வசூல் செய்துள்ளதாகவும், தமிழகத்தில் குறைந்தபட்சம் ரூ 3 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் விமரச்னங்கள் பாஸிட்டிவாக இருப்பதால் திரையரங்கங்களை அதிக படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.