'ஆரண்ய காண்டம்' படத்தை இயக்கி ஒட்டுமொத்த ரசிகர்களை ஒரே படத்தில் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. இவர் நீண்ட இடைவேளைக்குப் பின் இயக்கி வரும் திரைப்படம் 'சூப்பர் டீலக்ஸ்' வித்தியாசமான கதைக் களத்தோடு உருவாகியுள்ள, இந்த படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கையாக நடித்துள்ளார்.

இது ரசிகர்களுக்கு படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சமீபத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணா இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசியபோது, முதல் காட்சிக்கே 37 டேக் வாங்கியதாக தெரிவித்தார். அதேபோல் விஜய் சேதுபதி 80 டேக் எடுத்ததாகவும் கூறினார்.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலரில், விஜய் சேதுபதி காடு... மனிதன்.. புலி.. பாம்பு.. என அடுக்கடுக்காக வசனங்கள் பேசி இருப்பார். இந்த வசனம் பலரையும் பிரமிக்க வைத்தது. இந்நிலையில் இந்த வசனம் அட்டக்காப்பி என்பதை உறுதி செய்யும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது 1969 - யில் வெளியான, 'சாந்தி நிலையம்' படத்தில் ஜெமினி கணேசன் குழந்தைகளுக்கு கதை சொல்லும் காட்சி இடம்பெற்றிருக்கும். அதே கதையா சற்று மாற்றி புலி... பாம்பு... என மாற்றி 'சூப்பர் டீலக்ஸ்' ட்ரைலரில் பயன்படுத்தியுள்ளனர். இதனை நெட்டிசன்கள் வீடியோவோடு வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர்.