sunny leyone share the opinion for his childs
சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் டானியல் ஆகியோர், கடந்த 2017ம் ஆண்டு பெண் குழந்தையொன்றை தத்தெடுத்தனர். மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட லாத்தூரில் இருந்து நிஷா கவுர் என்ற பெண் குழந்தையை அவர்கள் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளும் சன்னி மற்றும் டானியல் தாய் தந்தை ஆகினர். இதை இருவரும் பெருமைக் கொள்ளும் விதமாக தங்களின் ட்விட்டர் பக்கத்திலும் பகி்ர்ந்து இருந்னர். அந்த பதிவில் “ இது கடவுளின் திட்டம்!! 3 குழந்தைகளுடன் குறுகிய காலத்திலேயே குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டோம்.
பல ஆண்டுகள் கழித்து ஆஷர் சிங், கோவா சிங், நிஷா கவுருடன் எங்கள் குடும்பம் முழுமை அடைந்திருக்கிறது. எங்கள் இரட்டைக் குழந்தைகள் சில வாரங்களுக்கு முன்புதான் பிறந்தனர். ஆனால், பல ஆண்டுகளாகவே எங்கள் இதயங்களிலும், கண்களிலும் வாழ்ந்து வந்தனர். எங்களுக்கு சிறப்பானதை அளிக்கவே கடவுள் திட்டமிட்டிருக்கிறார். எங்களுக்கு பெரிய குடும்பத்தை தந்திருக்கிறார். மூன்று குழந்தைகளின் பெருமையான பெற்றோர்கள் நாங்கள். உங்கள் எல்லோருக்கும் இது அதிர்ச்சி!”என்று கூறியிருந்தார்.
இந்த பதிவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்திருந்தது. பிரபலங்கள் பலரும் இந்த பதிவிற்கு தங்களின் வாழ்த்துகளை கூறியிருந்தனர். இந்நிலையில், சன்னியும் அவரது கணவரும் தங்களின் ஆண் குழந்தைகளுக்கு நோவா சிங் வெபர் மற்றும் அஷெர் சிங் வெபர் என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.
இதனையடுத்து சன்னிலியோனின் கணவர் டேனியல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரட்டை ஆண் குழந்தைகளை தனது அருகில் படுக்க வைத்துக் கொண்டு புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இவர்கள் தான் என் உலகம். இவர்கள் மட்டும் தான் என் வாழ்க்கை என்றும் தெரிவித்துள்ளார். இந்த பதிவு இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதே நேரத்தில் சன்னியின் ரசிகர்களோ… ” உங்களுக்கு உங்கள் குழந்தை தான் வாழ்க்கை என்றால்.. எங்களுக்கு எங்கள் சன்னி தான் தான் வாழ்க்கை” என்று வழக்கம் போல் நக்கல் நையாண்டியுடன் பல கருத்துக்களை பதிவு செய்து வருகின்றன.
