sunny leyone release special vedio
புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு, புகை பிடிக்காதீர் என பேருந்து நிலையம், சினிமா தியேட்டர், கடைகள் என அனைத்து இடங்களிலும் புகை பழக்கத்திற்கு எதிராக பதாதைகளை ஒட்டப்பட்டிருந்தாலும்.
இதனை சிறிதும் கண்டுகொள்ளாமல், பல ஆண்கள் மற்றும் பெண்களும் கூட புகை பழக்கத்திற்கு ஆளாகி புற்று நோய், மூச்சு திணறல், நுரையீரல் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பழக்கத்துக்கு அடிமையானவர்களை திருத்துவது முக்கியம் என்பதை வலியுறுத்தும் விதமாக வீடியோ ஒன்றை, பிரபல நடிகை சன்னிலியோன் நடித்து வெளியிட்டுள்ளார்.
அதில் அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள ஒரு வாலிபர் மரணபடுக்கையில் இருக்கிறார்.
அவர் சன்னிலியோனை பார்க்க ஆசைபடுகிறார். அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்ற சன்னிலியோனை அவரிடம் அழைத்து வருகிறார்கள். அந்த வாலிபரை சன்னி தனது விரலால் தொடுகிறார். உடனே அவர் இறந்து விடுகிறார்.
“புகைபிடிக்கும் பழக்கத்தால் உயிர் தான் போகும்” என்று அந்த வீடியோ முடிகிறது. புகைக்கு எதிராக தான் கொடுத்த குரலுக்கு பலன் கிடைக்கும் என்று சன்னிலியோன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இப்போது வேகமாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
