sunny leyone enter tamil cinema

பலரால் நீலப்பட நடிகையாக அறியப்பட்டவர் சன்னி லியோன். மிகவும் போராடி பாலிவுட் திரையுலகில் நுழைந்த இவர் தற்போது பல வெற்றிப்படங்களைக் கொடுத்து முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தைப் பெற்றுள்ளார். பாலிவுட் சினிமாவில் பிஸியாக இருக்கும் இவர் தற்போது முதல் முறையாக கோலிவுட் படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இவர் ஏற்கனவே ஜெய் நடித்து வெளிவந்த, வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் திரையுலகில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வரும் இவர், தற்போது தமிழில் முதல் முறையாக நாயகியாக அறிமுகம் ஆக உள்ளதால், கோடிக்கணக்கில் இருந்து லட்சக் கணக்கிற்கு தன்னுடைய சம்பளத்தை குறைத்துள்ளாராம்.

தற்போது, சன்னி லியோன் நடிக்கும் படத்திற்கு 80 லட்சம் சம்பளம் வாங்க உள்ளதாகவும், இந்தப் படத்தின் படப் பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.