Sunny Leone playing a heroine in Tamil film
பிரபல நடிகை சன்னி லியோன் தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பாலிவுட்டின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். இவர், டான் ஹி ஜூங், லவ் யு ஆலியா, ஒன் நைட் ஸ்டாண்ட், நூர், பாட்ஷாகோ, லீலா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
பல படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடக் கூடியவராகவும் இவர் வலம் வந்திருக்கிறார். ஜெய் நடிப்பில் தமிழில் வெளியான வடகறி படத்தில் கூட ஒரு பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது தமிழில் டப் செய்யப்பட இருக்கும் வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தில் சன்னி லியோன் கதநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தம்பி வெட்டோத்தி சுந்தரம், சௌகார்பேட்டை ஆகிய படங்களை இயக்கியவர் விசி வடிவுடையான். தற்போது தெலுங்கில் வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தை இயக்கவுள்ளார்.
தெலுங்கைத் தொடர்ந்து இந்தப் படம் தமிழ், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து சன்னி லியோன் கூறியது: கடந்த ஒரு வருடமாக நல்ல கதைக்காக காத்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் இயக்குனர் வடிவுடையானின் கதை எனக்கு பிடித்திருந்தது. அதனால், அவரது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
எனக்கு தென்னிந்தியாவில் ஆந்திரப்பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நிறைய இரசிகர்கள் இருக்கின்றனர். எனக்கு பெரும்பாலும், ஆக்ஷன் படத்தில் நடிப்பதுதான் பிடிக்கும். இப்படமும் வரலாற்று கதையம்சம் கொண்ட ஒரு ஆக்ஷன் படம் என்பதால் உடனே நான் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இப்படத்திற்காக குதிரையேற்றம், வாள்பயிற்சி போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறாராம்.
