கோடிக்கணக்கான ரசிகர்களின் ஏக்கத்தை தூண்டி, தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கும் சன்னிலியோன் இந்தி பட உலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவர் பாலிவுட்டில் நடித்து ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த ‘ராகினி எம்.எம்.எஸ்.-2’ என்ற இந்தி படம் தற்போது ‘ராத்ரி’ என்ற பெயரில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. 

இப்படத்தில் சன்னி லியோன் கவர்ச்சி பேயாக நடித்து மிரட்டியிருக்கிறார். ‘சாமுராய்’ புகழ் அனிதா, பர்வீன் தபாஸ், சந்தியா மிருதுல், கரண் தாலுஜா உட்பட பலரும் நடித்திருக்கிறார்கள்.

பூஷன் பட்டேல் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சித்ரஞ்சன் பட், மீட்பராய் அஞ்சான், யோ யோ ஹனிசிங், பிரனாய் ரிஜியா, அமர் மொஹைல் ஆகியோர் இசையமைத்துள்ளார்கள். 

இந்த படத்தில் சன்னி லியோன் நடனமாடிய ‘பேபி டால்’ என்ற சூப்பர் ஹிட் பாடலை இதுவரை சுமார் 8 கோடி பேர் யூடியூப்பில் பார்த்து ரசித்துள்ளனர். இந்த பாடலை தற்போது தமிழ், தெலுங்கு டப்பிங்கில் ‘ஜொலி ஜொலிக்கும் டிஜிட்டல் பொண்ணு’ என்று தொடங்கும் ஸ்டைலிஷ் பாடலாக ரம்யா நம்பீசன் கிக் ஏற்றும் குரலில் பாடியுள்ளார். 

கவர்ச்சி காட்சிகளிலும், திகில் காட்சிகளிலும் ரசிகர்களை மிரட்டப் போகும் சன்னி லியோனின் ‘ராத்ரி’ விரைவில் திரைக்கு வருகிறது. ஷோபா கபூர், ஏக்தா கபூர் ஆகியோர் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரித்திருக்கின்றனர்.

இந்திய திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக கடந்த 17 வருடங்களாக இயங்கி வரும் ஸ்ரீ பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுவதன் மூலம் தென்னிந்திய திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறது.