sunnileyone taking about her daughter

நடிகை சன்னி லியோன் ஆபாச பட நடிகை என்பதால், இவர் இந்தியாவில் தங்க பல்வேறு பிரச்சனைகள் எழுந்தாலும் நாளடைவில் அந்த பிரச்சனைகள் எல்லாம் சுமுகமாக முடிந்தது. தற்போது பல படங்களில் சன்னி லியோன் நடித்து வருகிறார். இவருடைய கால் ஷீட் வாங்க பல பிரபலங்கள் காத்திருக்கின்றனர். அந்த அளவிற்கு பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவர் மும்பையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று நிஷா என்கிற பெண்குழந்தையை தத்தெடுத்தார்... தற்போது ஏன் குழந்தையை தத்தெடுத்தேன் என்பதை கூறியுள்ளார் சன்னி. 

இது குறித்து அவர் கூறுகையில்... “எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.. இதனால் அருகில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்தற்கு சென்று அங்கு இருக்கும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவேன் அதே போல் ஒரு நாள் எனது கணவர் டேனியலை அழைத்துச் சென்று இருந்தேன்.

அப்போது ஒரு குழந்தையை தத்து எடுத்து கொள்ளலாமா என ஒரு வித அச்சத்துடன் தான் கணவரிடம் கேட்டேன்.. காரணம் இதற்கு அவர் சம்மதிப்பாரா மாட்டாரா என்கிற பயம் தான். ஆனால் நான் இப்படி கூறியதும் அவர் உடனே சரி என்று கூறி தனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

பின் இருவரும் முடிவு செய்து அந்த இல்லத்தில் வளர்ந்து வந்த நிஷா என்கிற குழந்தையை எடுத்து வளர்த்து வருகிறோம். 
தற்போது எனது மகள் எங்கள் வீட்டில் மகிழ்ச்சியாக வளர்கிறால். நிஷா பெரிய பெண்ணாக வளர்ந்ததும் அவள் தத்து குழந்தை என்ற உண்மையை தெரிவிப்பேன். நான் உண்மையான தாய் இல்லை என்பதையும் சொல்வேன். நிஷாவை தத்து எடுத்த பிறகு அவளுடைய உண்மையான தாயாகவே நான் மாறி விட்டேன். குழந்தையும் தன்னை தாயாக தான் பார்க்கிறாள் என கூறியுள்ளார் சன்னி லியோன்.