sunder c said kushpoo operation

நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கடந்த சில தினங்களாக வயிற்று வலி பிரச்சனையால் அவதிப் பட்டு வந்தார். இதுகுறித்து மருத்துவமனைக்கு சென்றபோது அவருடைய வயிற்றில் கட்டி உள்ளதாகவும் அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் அவர் நேற்று சென்னையில் உள்ள பிரபல மருத்துவ மனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்றே அறுவை சிகிச்சை நல்ல படியாக முடிந்தது.

தற்போது இவருடைய கணவர் குஷ்புவின் நிலை குறித்து கூறியுள்ளார். அதில் தற்போது அறுவை சிகிச்சை முடிந்து குஷ்பு நன்றாக உள்ளதாகவும். இன்னும் இரு தினங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் கூறியுள்ளார். மேலும் இரண்டு வாரங்கள் அவரை ஓய்வு எடுக்கச் சொல்லி மருத்துவர்கள் கூறி இருப்பதாகவும், பின் அவர் வழக்கம் போல் தன்னுடைய அன்றாட பணிகளை மேற்கொள்வர் என்றும் அவரது அறுவை சிகிச்சை குறித்து விசாரித்த அனைவருக்கும் தன்னுடைய நன்றியையும் தெரிவித்துள்ளார்