sunder c copy for rajamouli style

பிரமாண்ட இயக்குனர் ராஜமெளலியின் சரித்திர சாதனை திரைப்படங்களான 'பாகுபலி மற்றும் 'பாகுபலி 2' திரைப்படங்கள் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் தற்போது, இதேபாணியில் கோலிவுட்டில் மேலும் ஒருசில படங்கள் இரண்டு பாகங்களில் தயாராகி வருகின்றன. சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன், 'தனுஷின் 'வடசென்னை' ஆகிய படங்கள் இரண்டு பாகமாக எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவுள்ள 'சங்கமித்ரா' திரைப்படமும் இரண்டு பாகங்களில் தயாராகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் அல்லது ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும், மே 18ஆம் தேதியன்று டைட்டில் லுக் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரும் பொருட்செலவில் தயாராகவுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்பட மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.

ராஜமௌலியை பின்பற்றி, தன்னுடைய சங்கமித்ரா படத்தை இயக்க உள்ள சுந்தர் சி, வெற்றி கனியை பறித்து பாகுபலி பக்கத்தில் நிற்பாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

மேலும் இந்த படத்திற்கு, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சாபுசிரில் கலை வண்ணத்தில், கமலக்கண்ணன் கிராபிக்ஸ் இயக்கத்தில் இந்த படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.