மவுசு குறையாத “தங்கம்”... சத்தமில்லாமல் சாதித்த “மெட்டி ஒலி”... பழைய சீரியல்களுக்கு இப்படியொரு வரவேற்பா?
இந்நிலையில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்ட சீரியல்களுக்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை பார்த்து Barc india (Broadcast Audience Research Council) வாயடைத்து போய்விட்டது.
கொரோனா எனும் கொடிய அரக்கனுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையாக போராடி வருகின்றன. இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பதற்காக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் சினிமாத்துறைக்கு மிகப்பெரிய அடி என்றால், மற்றொருபுறம் சின்னத்திரையே திண்டாடி வருகிறது.
எந்த ஷூட்டிங்கும் நடைபெறாததால் புதிய ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களின் அடுத்த எபிசோட்களை ஒளிபரப்ப முடியாமல் சிக்கலில் சிக்கின. அதனால் சின்னத்திரை ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்ற சீரியல்களை மீண்டும் ஒளிபரப்ப ஆரம்பித்தன. அப்படி சன் தொலைக்காட்சியில் ரம்யா கிருஷ்ணன் நடித்த தங்கம், ரசிகர்களை ஏகபோக வரவேற்பை பெற்ற மெட்டி ஒலி ஆகிய தொடர்கள் மறுஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
இந்நிலையில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்ட சீரியல்களுக்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை பார்த்து Barc india (Broadcast Audience Research Council) வாயடைத்து போய்விட்டது. ரசிகர்களின் ஓவர் ரெஸ்பான்ஸ் உடன் முதல் இடத்தை பிடித்துள்ளது நம்ம சக்திமான். தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் அதிக ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது. அடுத்ததாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தங்கம் மற்றும் மெட்டி ஒலி சீரியல்களை காணும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.