விஷ்ணு விஷால் இயக்கி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ராட்சசன் படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியது. 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த ஆண்டில் இரு மிகப்பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்துள்ளது. ஒன்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுடன் நடிகர் விஜய் மீண்டும் இணைந்துள்ள சர்கார். மற்றொன்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட. சர்கார் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள நிலையில், பேட்ட படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் சன் நெட்வொர்க் குழுமம் மேலும் ஒரு வெற்றிப் படத்தைக் கைப்பற்றியுள்ளது. ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு நடித்த ராட்சனனின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளது. முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமாருடன் விஷ்ணு மீண்டும் இணைந்த ராட்சசன், கடந்த ஐந்தாம் தேதி வெளியாகி மூன்று வாரங்களைக் கடந்து வெற்றி கரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

 

முழுக்க முழுக்க த்ரில் குறையாமல், தொழில்நுட்ப யுக்திகளை சிறப்பாக கையாண்டு அமைக்கப்பட்ட திரைக்கதை படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. சைக்கோ கதை என்ற போதிலும் கதை சொன்ன விதத்தில் ராம் குமார் வெற்றி பெற்று விட்டார் என்பதே ராட்சசன்  படம் பார்த்த அனைவரின் கருத்தாக இருந்தது. தற்போது இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவியும், டிஜிட்டல் உரிமையை சன் நெக்ஸ்டும் பெற்றுள்ளன. எனவே ராட்சசன் படம் விரைவில் சன் டிவியில்...