'பிகில்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து, 'தளபதி' விஜய் நடித்து வரும் படம் 'தளபதி-64'. இந்தப் படத்தை, 'மாநகரம்', 'கைதி' ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார்.  வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளார். இதுமட்டுமின்றி ஆண்ட்ரியா, ஸ்ரீமன், '96' புகழ் கவுரி கிஷான், 'பவி டீச்சர்' பிரிகிடா, வி.ஜே.ரம்யா, சாந்தனு, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சேத்தன், சஞ்சீவ், பிரேம் என  நட்சத்திர பட்டாளங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்தப் படத்திற்கு ராக் ஸ்டார் அனிரூத் இசையமைக்க உள்ளார். 

 

இதையும் படிங்க: ரஜினி, தனுஷை ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன்... ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம்... கெத்து காட்டும் ஹீரோ செகண்ட் சிங்கிள்...!

சென்னையில் முதற்கட்ட ஷூட்டிங்கும், டெல்லியில் 40க்கும் மேற்பட்ட நாட்கள் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கும் நிறைவடைந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மூன்றாம் கட்ட ஷூட்டிங் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்காக பெங்களூருவில் பிரம்மாண்ட சிறைச்சாலை செட் போடப்பட்டுள்ளதாகவும், அங்கு தான் விஜய், விஜய்சேதுபதி மோதிக்கொள்ளும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்டண்ட் சில்வாவை வைத்து எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தளபதி 64 படத்திற்கான அப்டேட்டை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கும் நிலையில், நேற்று வெளியான அதிரடி தகவல் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. 

 

இதையும் படிங்க: கனவு நிறைவேறியது... சூப்பர் ஸ்டாருடன் நான்... நடிகர் சூரியின் உருக்கமான வீடியோ பதிவு...!

தற்போது தளபதி 64 படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டி.வி. வாங்கியுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் சன் டி.வி. அறிவித்துள்ளது. சன் டி.வி.யை பொறுத்தவரை புரோமோஷன் நிகழ்ச்சிகளில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். மேலும் சன் டி.வியின் புதுமையான விளம்பர யுக்தி பட்டி, தொட்டிகளைக் கூட சென்றடையும் என்பதால் விஜய் ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளனர்.