சிவகார்த்திகேயன் நடிப்பில், டிசம்பர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள திரைப்படம் 'ஹீரோ'. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை, பிரபல சன் டிவி தொலைக்காட்சி கை பற்றியுள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

இரும்பு திரை படத்தை இயக்கி, பிரமிக்க வைத்த இயக்குனர் பி.எஸ் மித்ரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர், ரசிகர்களை கவர்ந்தது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடம் அதிகரித்தது.

சிறிய வயதில் இருந்ததே சூப்பர் ஹீரோவாக வளர வேண்டும் என்கிற ஆசையில் வளரும் குழந்தை, எப்போடி ஹீரோவாக மாறுகிறார் என்பதை விறுவிறுப்பு மற்றும் அக்ஷன் கலந்து கூறியுள்ளார் இயக்குனர்.

இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாப்பாத்திரத்தி நடித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார், மேலும் இவானா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.