வணக்கம் சென்னை' படத்திற்குப் பிறகு சிவாவுடன் அவர் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்களுடன் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் சுமோ மல்யுத்த வீரர் யோசினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நகைச்சுவை கலந்த சென்டிமென்ட் படமாக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு நடிகர் சிவாவே திரைக்கதை மற்றும் வசனத்தையும் எழுதியுள்ளார் என்பது ஹைலைட். 

பிப்ரவரி-14, ஆயிரம் விளக்கு படங்களை இயக்கிய ஹோசிமின் இந்தப் படத்தை இயக்குகிறார். சுமோ விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ராஜிவ்மேனன் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார்.


 
'எல்.கே.ஜி'., 'கோமாளி' உள்ளிட்ட படங்களை தயாரித்த வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம்தான், 'சுமோ' படத்தையும் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள், ஜப்பானில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன்பின்னர், படம் குறித்த எந்தவொரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

இந்நிலையில், சிவாவின் 'சுமோ' படம் பொங்கல் வெளியீடாக திரைக்குவரவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இன்ப அதிர்ச்சியளித்துள்ளது.
ஏனென்றால், 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் தர்பார் படமும் பொங்கல் விருந்தாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


தற்போது, அந்தப் படத்துடன், 'அகில உலக சூப்பர் ஸ்டார்' சிவாவின் 'சுமோ' படம் மோதவிருப்பது ரசிகர்களை திகைப்படைய செய்துள்ளது. இதனையடுத்து, பொங்கல் ரேஸில் ஜெயிக்கப்போவது சூப்பர் ஸ்டாரா? அல்லது அகில உலக சூப்பர் ஸ்டாரா? என்கிற அளவுக்கு இப்போதே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பட்டிமன்றமே நடத்தி வருகின்றனர்.