தொழிலதிபர்களுக்கு நடிகைகளின் வயதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை போல. 46 வயதாகும் நடிகை சுமா ரங்கநாத்தை இரண்டாம் தாரமாக திருமணம் செய்திருக்கிறார் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சஜன் சின்னப்பா.

நடிகை சுமன் ரங்கநாதன், 1980-ம் ஆண்டுகளில் கன்னட திரையுலகில் மிக பிரபலமாக இருந்தார். நடிகர் சங்கர்நாக் நடித்த ‘சி.பி.ஐ. சங்கர்’ படத்தில் சுமன் ரங்கநாதன் நடித்தார். நடிகர் அம்பரீசுடன் ‘கோகிலே கோகிலே’ படத்தில் நடித்தார். தமிழில் பஞ்சு அருணாச்சலத்தின் இயக்கத்தில் ராமராஜனுடன் ‘புதுப்பாட்டு’ படத்தில் அறிமுகமாகி ‘மாநகரக்காவல்’,’உன்னை வாழ்த்திப்பாடுகிறேன்’ உட்பட பத்துப்படங்கள் வரை நடித்தார். இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் அஜீத்தின்’ஆரம்பம்’.

தமிழில் பெரிய அளவில் மார்க்கெட்டை எட்டாத நிலையில் மீண்டும் கன்னடப் படங்களில் பிசியாக நடித்த சுமா  தயாரிப்பாளர் வாலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  மனக்கசப்பு காரணமாக அவரிடமிருந்து 2007-ம் ஆண்டு சுமன் ரங்கநாதன் விவாகரத்து பெற்றார்.

பின்னர் 12 ஆண்டுகள் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் 46 வயதாகும் நடிகை சுமன் ரங்கநாதன், குடகு மாவட்டத்தை சேர்ந்த தொழில் அதிபர் சஜன் சின்னப்பா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். கன்னட சின்னத்திரைகளில் சில நிகழ்ச்சிகளின் நடுவராக இன்றும் ப்சியாகவே இருக்கிறார் சுமா ரங்கநாத்.