கடந்த சில வருடங்களாக நடிகை சுஜா வருணி மற்றும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் இவர்களுடைய திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடந்தது.

திருமணம் ஆன புதிதில் இருந்து, தன்னுடைய கணவருடன் மிகவும் நெருக்கமாக எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார் சுஜா. அதே போல் ஒரு நாள் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் தெரிவித்தார்.

சமீபத்தில் கூட இவருக்கு மிகவும் விமர்சியாக வளையக்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  இது குறித்த புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன் சுஜா மற்றும் சிவகுமார் தம்பதிகளுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை சிவகுமார் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், தன்னுடைய சிம்பா பிறந்து விட்டதாக மிகவும் பெருமையுடன் கூறி இருந்தார்.

இதை தொடர்ந்து, தனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் கனிமொழிக்கு நன்றி கூறும் விதத்தில், மருத்துவர் மற்றும் குடும்பத்தோடு சேர்த்து எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சுஜா. இவரின் இந்த செயல், பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.