சுஜா வருணி:

'பிளஸ் 2' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை சுஜா வருணிக்கு இந்த படத்தை தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகளே கிடைக்க வில்லை. பின் சில படங்களில் கவர்ச்சி நடனம் மற்றும் குணசித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். தற்போது மீண்டும் இவருடைய திரையுலக பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி. 

பிக் பாஸ்:

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் 15 நபர்களுடன் துவங்கியது. பலர் எலிமினேட் ஆன பின்பு வயல் கார்ட் சுற்று மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றவர் நடிகை சுஜா வருணி. 

இவர் நடிகை ஓவியாவை பிரதிபலிப்பது போல் நடந்துக்கொண்டது ரசிகர்கள் பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. பின் ஒரு சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். 

ஆபாச கமெண்ட்க்கு பதிலடி:

ஒரு சில படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வரும் இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ஒரு சினிமா விழாவில் கலந்துக்கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இவர் அணிந்திருந்த உடை மிகவும் மோசமாக இருந்ததாக கூறி நெட்டிசன்கள் சிலர் ஆபாசமாக தங்களுடைய கருத்தை தெரிவித்திருந்தனர். 

தற்போது  இவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் 'நான் ஒரு நடிகை தான் என்னுடைய சாப்பாட்டை நான் உழைத்து பெருமையாக சாப்பிடுகிறேன். சினிமா மற்றும் பொது நிகழ்சிகளில் என் உடை எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்வது நான் தான். அது என் விருப்பம்... என் உரிமை. என் உடை உங்களுக்கு என்ன பிரச்சனை தருகிறது. என் உடைதான் குழந்தைகள் பாலியல் துன்புருத்தளுக்கு காரணமா? என சொல்லால் அடித்துள்ளார்.

மேலும் இதற்கெல்லாம் காரணம் நடிகைகளும் அவர்களுடைய உடைகளும் இல்லை. உங்களிடம் தான் பிரச்சனை இருக்கிறது. இண்டர்நெட் என்னும் மிகப்பெரிய உலகில் நீங்கள் ஆபாச கமெண்ட் அடித்துவிட்டு தப்பித்துவிடலாம் என்று எண்ண வேண்டாம். நிச்சயம் நீங்கள் ஒருநாள் தண்டிக்கப்படுவீர்கள் என்று சுஜாவருணி தெரிவித்துள்ளார்.