புதிய போட்டியாளராக தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள சுஜா ஓவியாவை போலவே நடந்துக்கொள்கிறார் என்று கூறி வையாபுரி, ஆரவ், மற்றும் ரைசா ஆகியோர் அவரை பின்னால் நின்று புறம் கூறி வருகின்றனர்.

காமெடி நடிகர் வையாபுரி "இவர் கேமரா முன் நின்று ஓவியாவை போல் பேசுகிறார்", "நடனம் ஆடுகிறார் என பழித்து காண்பிக்கிறார்". அதே போல இவரின் செயல் பாடுகள் பிடிக்காமல் அனைவரும் இவரிடம் பேசாமல் இவரை  ஓரம் கட்டுகின்றனர்.

இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு, சுஜா பிக் பாஸ்ஸிடம் "தன்னிடம் யாரும் பேசுவது இல்லை", எனக்கு முன்னால் என்ன நடக்கிறது, பின்னால் என்ன நடக்கிறது என தனக்கு தெரியவில்லை என கூறி கண்ணீர் விடுவது போல் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

சுஜா ஓவியாவை போல் நடந்துக்கொண்டால் அவரிடம் இது குறித்து நேரடியாக கூறாமல், பின்னால் போய் மற்ற போட்டியாளர்கள் பேசுவதும், அவரை தனிமை படுத்துவதுமாக இருந்தால் ஓவியாவை போல் இவருக்கும் ரசிகர்கள் அதிகமாக வாய்ப்புள்ளதாக பலர் வலைத்தளங்களில் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.