பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் ஜூலியை இந்த இடத்தை விட்டு துரத்தியே ஆக வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டிருந்த காயத்ரி இப்போது அவருக்கு செல்லம் கொஞ்சி சாப்பாடு ஊட்டி விடுகிறார்.

இதனை பார்த்து கொண்டு சாப்பிட்டு கொண்டிருந்த சிநேகனுக்கு திடீர் என அவருடைய வீடு ஞாபகம் வந்து விட்டது என கூறி தொடர்ந்து அழுதுக்கொண்டே இருந்தார்.

ஒரு நிலையில் அனைவரும் கூடி அவரை சமாதான படுத்தினர். அதிலும் ஜூலி அவருக்கு தன்னுடைய ஷாலால் கண்ணையெல்லாம் துடைத்து விட்டு தங்கை என்பதை நிரூபித்துவிட்டார்.