தமிழ் திரையுலகையும் தாண்டி இசை ஞானி இளையராஜாவின் புகழ் தமிழர்கள் வசிக்கும் நாடுகள் முழுவதும் பரவியுள்ளது. இசை உலகின் ராஜாவாக வலம் வரும் இளையராஜா வீட்டில் ஏற்பட்ட திடீர் சோகம் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இளையராஜாவை இசை மோதையாக உருவாக்கி பார்க்க பெரிதும் ஆசைப்பட்டு, அதற்காக அரும்பாடு பட்டவர் அவருடைய அண்ணன் பாவலர் வரதராஜன். அவரது இளைய மகன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். 

 

இதையும் படிங்க: ஸ்ருதி ஹாசன் உடலில் எங்கெல்லாம் டாட்டூ குத்தியிருக்காங்க தெரியுமா?... விளக்கத்துடன் கிளுகிளுப்பு கிளிக்ஸ்...!

ஹோமோ ஜே எனும் பாவலர் மைந்தன், இயக்குநர் ஆர்.வி. உதயகுமாரிடம் கிழக்கு வாசல், சிங்கார வேலன், சின்ன கவுண்டர் உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். நடிகர் விக்ராந்த் ஹீரோவாக அறிமுகமான கற்க கசடற படத்திற்கு வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். தற்போது நாலு பேரும் ரொம்ப நல்லவங்க என்ற படத்தை இயக்கி வந்தார். இதில் பவர் ஸ்டார் சீனிவாசன், யாசின் உள்ளிட்டோர் நடித்து வந்தனர். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு அழகான அக்கா மகளா?.... முன்னணி நடிகைகளையே அசர வைக்கும் அழகு...!

இந்நிலையில் பாவலர் மைந்தன் கடந்த சில நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பாவலர் மைந்தன் உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் இளையராஜா குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த துயர செய்தியைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.