கடந்த இரு வருடங்களுக்கு முன்பு ‘சுசி லீக்ஸ்’செய்திகள் மூலம் பரபரப்படைந்தவர் பாடகி சுசித்ரா. நட்சத்திரங்களின் பாலியல் அந்தரங்கங்களை வெளியிட்டு சினிமாவுலகுக்குள் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தினார் சுசி. அதனைத்தொடர்ந்து அவரது சமூக வலைதல அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக சொல்லி அவரது கணவர் நடிகர் கார்த்திக் குமார் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன்பிறகு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில் தன் தாய்வீட்டிலிருந்து வெளியேறி சகோதரி சுனிதா வீட்டில் வசித்துவரும் சுசித்ராவை கடந்த 11ம் தேதி முதல் காணவில்லை என்றும் இது தொடர்பாக சுனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் சுசித்ராவைத் தேடி வந்த போலீஸார் அவரை நட்சத்திர விடுதியிலிருந்து மீட்டதாகக் கூறப்படுகிறது. மன அழுத்தத்தில் இருந்ததால் அவரை தற்போது மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகத் தகவல்.  இது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் சுசித்ராவின் செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைவைத்து போலீசார் துப்பு துலக்கினர். அப்போது சுசித்ரா அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சுசித்ரா நான் காணாமல் போகவில்லை என்று போலீசாரிடம் கூறினார். இதுபற்றி பாடகி சுசித்ராவிடம் கேட்டபோது, ’’நான் மாயமானதாக கூறி பொய்யான புகாரை போலீசில் அளித்துள்ளனர். இப்போதும் என்னை மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக அனுமதித்துள்ளனர். 

நான் மாயமாகவில்லை. ஓட்டலில் சென்று ஓய்வு எடுத்தேன். இதுபோன்று புகார் அளிப்பதற்கான காரணம் என்ன? என்பது எனக்கு தெரியவில்லை’’ என்றும் சுசித்ரா தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் புகார் அளித்த சுசித்ராவின் தங்கை சுனிதாவிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது பதில் அளிக்க அவர் மறுத்துவிட்டார். ஒருவார காலம் நட்சத்திர ஹோட்டலில் சுசித்ரா தங்கி இருந்ததாக கூறுகிறார். அங்கே யாருடன் தங்கி இருந்தார்? எதற்காக தங்கி இருந்தார் என்பது மர்மமாகவே இருக்கிறது.  

மர்மமே… உனக்கு இன்னொரு பெயர்தான் சுசித்ராவா..?